29.03.2025 கருவூலங்களுக்கு வேலை நாளாக அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 28, 2025

Comments:0

29.03.2025 கருவூலங்களுக்கு வேலை நாளாக அறிவிப்பு

29.03.2025%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81


29.03.2025 declared as a working day for treasuries - 29.03.2025 கருவூலங்களுக்கு வேலை நாளாக அறிவிப்பு

பட்ஜெட் திருத்திய இறுதி மதிப்பீடு- அரசாணைகள் மாத இறுதியில் பிறப்பிக்கப்பட்டு பட்டியல்கள் கருவூலத்தில் அனுமதிப்பது - மார்ச் 29,30,31 தொடர் விடுமுறை வருவதால் 29.03.2025 கருவூலங்களுக்கு வேலை நாளாக அறிவித்தல் - தொடர்பாக

பட்டியல்கள் - மார்ச்2025 -பட்ஜெட் திருத்திய இறுதி மதிப்பீடு அரசாணைகள் மாத இறுதியில் பிறப்பிக்கப்பட்டு பட்டியல்கள் கருவூலத்தில் அனுமதிப்பது -மார்ச் 29,30,31 தொடர் விடுமுறை வருவதால்-29.03.2025 கருவூலங்களுக்கு வேலை நாளாக அறிவித்தல் - தொடர்பாக

மார்ச் 2025 மாத கடைசியில் நிதி ஆண்டு முடிவடையும் தருவாயில் இருப்பதால் அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் தொடர்பான செலவினங்களுக்கு அரசாணைகள் அரசிடம் இருந்து பெறப்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் சம்பளக் கணக்கு அலுவலகங்கள், சார் சம்பளக் கணக்கு அலுவலகங்கள் மற்றும் கருவூல அலுவலகங்கள் மூலமாக பட்டியல்கள் அனுப்பப்பட்டு ஏற்பளிப்பு செய்யப்படுகிறது. மார்ச் 2025 மாத கடைசியில் 29,30,31 ஆகிய 3 நாட்கள் அரசு விடுமுறை தினமாக இருப்பதால், அரசிடம் இருந்து கடைசி நேரத்தில் பெறப்படும் அரசாணைகள் துறைத்தலைமை அலுவலகத்தில் இருந்து மாவட்டங்களுக்கு வருவதற்கு தாமதம் ஆகலாம். எனவே, பட்டியல்களை அனுமதித்து 28.03.2025-க்குள் சம்பளக் கணக்கு அலுவலகங்கள், சார் சம்பளக் கணக்கு அலுவலகங்கள் மற்றும் கருவூல அலுவலகங்களில் பட்டியல்கள் பெறப்பட்டு உரிய நேரத்தில் ஏற்பளிப்பு செய்ய இயலாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வங்கி பணி நாளான 29.03.2025 அன்று அனைத்து கருவூலங்களிலும் பட்டியல்களை ஏற்பளிப்பு செய்து காசாக்கும் பொருட்டு, அனைத்து சம்பளக் கணக்கு அலுவலகங்கள், சார் சம்பளக் கணக்கு அலுவலகங்கள் மற்றும் கருவூல அலுவலகங்களுக்கு பணிநாளாக ஆணை வழங்கப்படுகிறது

👇👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD March 29th Working Day TREASURY only PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84627444