கரோனா தடுப்புக்கு அதிக நிதி தேவைப்படுவதால் அரசு ஊழியருக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் மேலும் ஓராண்டுக்கு நிறுத்திவைப்பு - தலைமைச் செயலர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 16, 2021

Comments:0

கரோனா தடுப்புக்கு அதிக நிதி தேவைப்படுவதால் அரசு ஊழியருக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் மேலும் ஓராண்டுக்கு நிறுத்திவைப்பு - தலைமைச் செயலர் அறிவிப்பு

IMG_20210516_131456
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியத்தை 2022 மார்ச் 31-ம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்துள்ளது.அனைத்துஅமைப்புகள், கழகங்கள், உள்ளாட்சிகள், பல்கலைக்கழகங்கள், ஆணையங்கள், நிறுவனங்கள், சங்கங்களுக்கும் இது பொருந்தும் என்று தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவித்துள்ளார். தமிழ்நாடு விடுப்பு விதிகள்படிஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள்ஈட்டிய விடுப்பாக வழங்கப்படுகிறது. இந்த விடுப்பை எடுக்காதவர்களுக்கு, ஆண்டு முடிவில் 15 நாட்களுக்கான முழு ஊதியமும் எந்தபிடித்தமும் இன்றி வழங்கப்படும். இதை அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்கு சேர்த்து 30 நாட்கள், அதாவதுஒரு மாத ஊதியமாகவும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளும் நடைமுறை உள்ளது. வழக்கமாக, ஆண்டுதோறும் அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஈட்டிய விடுப்புக்கான ஊதியத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தங்கள் துறையின் சம்பளக் கணக்கு அலுவலர் அல்லது தலைமை ஆசிரியர் மூலம்விண்ணப்பித்து பெற்று வருகின்றனர். இந்நிலையில், கரோனா தடுப்புபணிகளுக்கு அதிக நிதி தேவைப்படுவதால், 2021 மார்ச் வரை ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பை நிறுத்திவைக்க தமிழக அரசு முடிவெடுத்து, கடந்த 2020 ஏப்ரல் மாதம் அறிவித்தது. 2022 மார்ச் 31-ம் தேதி வரை: இந்நிலையில், தற்போது கரோனா 2-வது அலை வேகமாகபரவி வரும் சூழலில், தடுப்பு பணிகளுக்கு அதிக நிதி தேவைப்படுவதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் 2022 மார்ச் 31-ம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நிறுத்திவைக்கப்படுகிறது. அனைத்துஅமைப்புகள், கழகங்கள், உள்ளாட்சிகள், பல்கலைக்கழகங்கள், ஆணையங்கள், நிறுவனங்கள், சங்கங்களுக்கும் இது பொருந்தும் என்று தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84733550