திருப்பூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் கல்வித்தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பும் வகையில், அறிவியல் பாட செயல்பாடுகளுக்கான தயாரிப்பு குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.அரசு பள்ளிக் கல்வித்துறை கீழ் இயங்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பாக இப்பயிற்சி நடந்தது.உடுமலையில் தனியார் பள்ளியில் நடந்த இந்த பயிற்சியில், 3 முதல் 5ம் வகுப்புக்கான அறிவியல் பாட செயல்பாடுகள் தயாரிப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில், பள்ளி தாளாளர் ஜெயக்குமாரி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சித்தராமையா பேசினார். முதுநிலை விரிவுரையாளர் சுப்ரமணி, ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் ஆகியோர் பாட செயல்பாடு தயாரிப்பு, கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்தல் குறித்து விளக்கினர்.பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் கூறியதாவது:
அறிவியல் பாட செயல்பாடுகள் தயாரிப்பு பணியில், சின்னகுமாரபாளையம், ஆலாம்பாளையம், சமத்துவபுரம், எரிசனம்பட்டி, பாலப்பம்பட்டி மற்றும் கருப்பட்டிபாளையம் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர்.பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், மாணவர்களின் கல்வித்திறனையும், கருத்துகளையும் வலுவூட்டும் வகையில் பாட செயல்பாடுகளின் தயாரிப்பு இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, கூறினர்.
Search This Blog
Friday, August 20, 2021
Comments:0
அறிவியல் பாட செயல்பாடுகள்: ஆசிரியர்களுக்கு பயிற்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.