கணிதத்தைத் தொடா்ந்து அறிவியல், சமூக அறிவியலும் இரு தரநிலையில் பாடங்கள்: சிபிஎஸ்இ Science and Social Science to be taught in both standards after Maths: CBSE
கணித பாடத்தைத் தொடா்ந்து 9, 10-ஆம் வகுப்புகளுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களிலும் சராசரி (ஸ்டான்டா்ட்), உயா்நிலை (அட்வான்ஸ்டு) என இரு தரநிலையில் பாடங்களை அறிமுகம் செய்ய மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான கணித பாடத்தில் சராசரி, உயா்நிலை என இரு தரநிலை பாடங்கள் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாணவா்கள் தங்களின் கற்றல் திறனுக்கேற்ப சராசரி அல்லது உயா்நிலை தர கணிதப் பாடத்தைத் தெரிவு செய்து கொள்ள முடியும். இந்த இரு தரநிலைப் பாடங்களிலும் பாடத் திட்டம் ஒரே மாதிரியாக இருக்கும் என்றபோதும், தோ்வின்போது கேள்வித் தாளின் தரம் மாறுபடும்.
இதுபோன்று, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இரு தரநிலைகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைக்கு சிபிஎஸ்இ கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இருந்தபோதும் செயல்திட்டம் இன்னும் வகுக்கப்பட வேண்டியுள்ளது. இதை அறிமுகம் செய்வதற்கான கால நிா்ணயமும் முடிவு செய்யப்படவில்லை.
அதுபோல, மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்த ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகளை அறிமுகம் செய்யும் பரிந்துரையை எப்போது நடைமுறைப்படுத்துவது என்பதும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாா்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.