தமிழகத்தில் இயங்கும் பல்கலைக்கழகங்களின் உறுப்பு கல்லூரிகளில், 41 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படும் என்று 2018-ம்ஆண்டு ஜூன் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி, 41 கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டன.
இந்நிலையில், அந்த கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாககல்லூரி முதல்வர்களுக்குக் கல்லூரி கல்வி இயக்குநர் சி.பூர்ணசந்திரன் அனுப்பியசுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலிருந்து அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும்ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கான ஊதியத்தைச் சார்ந்த பல்கலைக்கழகங்களே வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
எனவே, தங்கள் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சம்பளத்தைப் பல்கலைக்கழக பதிவாளரை அணுகிப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.