தமிழக அரசின் நிதித் துறை இணையதள 'டேட்டா'க்களில் குழப்பம் ஏற்பட்டு உள்ளதால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சம்பள பட்டியல் தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 15ம் தேதியை கணக்கிட்டு, சம்பள பட்டியல் தயாரிக்கப்படும்.இந்த பட்டியல், அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படும்.
பின், 25ம் தேதிக்குள் அரசின் நிதித் துறை கட்டுப்பாட்டில் உள்ள கருவூலங்களில் தாக்கல் செய்யப்படும்.நிதித் துறையின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி மற்றும் மனிதவள மேலாண்மை இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும், 16ம் தேதி முதல், பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கும். இந்நிலையில், இந்த மாத சம்பள பட்டியல் தயாரிக்கும் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் துவங்கிய நிலையில், ஒரு வாரமாக நிதித் துறையின் இணையதளத்தில் தொழில்நுட்ப பிரச்னையால், பதிவுகளை மேற்கொள்ள முடியவில்லை. ஒரு வார தாமதத்துக்கு பின், நேற்று இணையதளம் செயல்பட துவங்கியது. அதிலும் அரசு ஊழியர், ஆசிரியர்களின் சுய விபர டேட்டாக்கள் முழுமையாக காண்பிக்கப்படாமல், தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இணையதளத்தில் காட்டும் டேட்டாக்கள் உள்ளவர்களுக்கும் சம்பள பட்டியல் தயாரிக்க முடியாமல், சர்வர் பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, நிதித் துறையின் மாவட்ட கணக்கு அதிகாரிகளிடம், ஊழியர்கள் புகார் அளித்தாலும் பிரச்னை தீரவில்லை என்பதால், இந்த மாத சம்பளம் தாமதமாகவே கிடைக்கும் வாய்ப்புள்ளதாக, அரசு ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.