ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தை இம்மாதமே பிடித்தம் செய்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு முதல்வருக்கு வேண்டுகோள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 13, 2021

Comments:0

ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தை இம்மாதமே பிடித்தம் செய்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு முதல்வருக்கு வேண்டுகோள்

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
IMG_20210513_194344
ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மனமுவந்து வழங்கும் ஒரு நாள் ஊதியத்தை இம்மாதமே பிடித்தம் செய்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு முதல்வருக்கு வேண்டுகோள் தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் உயிர்கொல்லி தொற்றான கொரோனாவை தமிழக மண்ணில் வீழ்த்துவதற்கு போர்க்கால அடிப்படையில் விரைந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் மாண்புமிகு புதிய முதல்வரை தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மனதார வாழ்த்துகிறது, பாராட்டுகிறது. அவர் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளுக்கும் எங்கள் சங்கம் தோள் கொடுத்து துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனாவை அழித்து ஒழித்திட மாண்புமிகு முதலமைச்சர் திரட்டும் நிவாரண நிதிக்கு, ஒரு நாள் ஊதியத்தை வழங்குகிறோம் என்று நாங்கள் எல்லாம் அங்கம் வகிக்கும் ஒட்டுமொத்த ஜேக்டோ-ஜியோவே அறிவித்திருப்பதை மாண்புமிகு முதல்வர் அவர்கள் நன்கு அறிவார்கள். ஆகவே நாங்கள எல்லாம் மனமுவந்து கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கும் இந்த ஒரு நாள் ஊதியத்தை இம்மாத ஊதியத்திலேயே பிடித்தம் செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு முதல்வர் அவர்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம். இவ்வாறு நாங்கள் வழங்கும் ஒரு நாள் ஊதியம் என்பது சுமார் 200 கோடிக்கு மேலாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84665588