ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் மேற்குவங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரது பெண் உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோரின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் .மாநில அரசின் 'குரூப் - சி, குரூப் - டி' பிரிவு அதிகாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான ஆசிரியர் நியமனத்தில் மோசடி வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க, கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தொழில் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்டோரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து , பார்த்தா சாட்டர்ஜி, அவருடைய நெருங்கிய பெண் கூட்டாளியான அர்பிதா முகர்ஜி, உள்ளிட்டோர் வீடுகளில் கடந்த இரண்டு நாட்களாக ரெய்டு நடத்தினர்.இதில், அர்பிதா முகர்ஜியின் வீட்டில் தோண்டத் தோண்ட பணம், நகைகள் கிடைத்தது. அவருடைய வீட்டில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அர்பிதா முகர்ஜியும், பார்த்தா சாட்டர்ஜியும் கைது செய்யப்பட்டனர்.
இருவரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில் பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி ஆகியோரின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் (ஆகஸ்ட் 18) வரை) நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.