Breaking

Tuesday, April 14, 2026

அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு ...

Attention to all Headmasters of Government and Government-Aided Primary, Middle, High, and Higher Secondary Schools... - அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு ...

1. வரும் 15/04/2026 புதன்கிழமை அன்று நடைபெறும் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு தேர்தல் பணி ஆணை பெற்றுள்ள அனைத்து ஆசிரியர்களும் மற்றும் அலுவலகப் பணியாளர்களும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.

2. ஒரு பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் நிலை இருந்தால் அப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கலாம்.

3. ஒரு பள்ளியில் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் இருந்தால் அன்றைய தினம் கண்டிப்பாக பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். பள்ளியின் வருகை பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும்.

4. பள்ளியை நடத்தும் அளவிற்கு போதுமான தேர்தல் பணிக்கு செல்லாத ஆசிரியர்கள் இருந்தால் மாணவர்களையும் பள்ளிக்கு வருகை புரியவைக்க வேண்டும்.

5. ஒரு பள்ளியில் தேர்தல் பணிக்கு செல்லாத ஒரு சில ஆசிரியர்கள் மட்டும் இருந்தால் அந்த ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு போதுமான மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும்.

6. அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் (Matric Schools) 15/04/2026 புதன்கிழமை அன்று முழு வேலை நாள் ஆகும்

முதன்மை கல்வி அலுவலர்

தூத்துக்குடி. ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி பயிற்சி: திருச்சியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

ஆசிரியர்களுக்கான தேர்தல் பணி பயிற்சி வகுப்புகள் காரணமாக, திருச்சியில் நாளை அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப் பிரியா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: ”திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நாளை (ஏப்.15) சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் செல்லவிருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சித் தலைவருமான வே.சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.

எனவே, திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

மேலும், ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்வதால் மைய மதிப்பீட்டு பணிகளுக்கும் நாளை முகாம் விடுமுறை என அறிவிக்க சார்ந்த முகாம் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் பணி ஆணை பெற்ற அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் உரிய நேரத்தில் தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.” என்று கிருஷ்ணப் பரியா கூறியுள்ளார் அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு ...

1. வரும் 15/04/2026 புதன்கிழமை அன்று நடைபெறும் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு தேர்தல் பணி ஆணை பெற்றுள்ள அனைத்து ஆசிரியர்களும் மற்றும் அலுவலகப் பணியாளர்களும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.

2. ஒரு பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் நிலை இருந்தால் அப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கலாம்.

3. ஒரு பள்ளியில் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் இருந்தால் அன்றைய தினம் கண்டிப்பாக பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். பள்ளியின் வருகை பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும்.

4. பள்ளியை நடத்தும் அளவிற்கு போதுமான, தேர்தல் பணிக்கு செல்லாத ஆசிரியர்கள் இருந்தால் மாணவர்களையும் பள்ளிக்கு வருகை புரியவைக்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர்கள் அறிவிப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog