பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்
அரசாணை வெளியீடு
சென்னை, மார்ச் 17: தமிழக பள்ளிக் கல்வியில் தொடர் நீட்டிப்பு
பெற்று வந்த ஆசிரியர், ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங் கள் நிரந்தரப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பி.சந்தர மோகன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
பள்ளிக் கல்வித் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக உள்ள பணியிடங்கள் தொடருவதன் அவசியம் குறித்து ஆராய துறையின் செயலர் தலைமையில் குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.
இதையடுத்து இந்தக் குழுவின் கூட்டம் கடந்த ஆண்டு ஆக.26-ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதில், பள்ளிக் கல் வியில் இணை இயக்குநர் பணியிடம் (நாட்டு நலப் பணித் திட்டம்)-1, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான நேர்முக உதவியாளர்கள்-31, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்-219, உயர்நிலைப் பள் ளித் தலைமை ஆசிரியர்கள்-107, முதுநிலை ஆசிரியர்கள்- 6,451, உடற்கல்வி இயக்குநர் (நிலை-1)- 26, பட்டதாரி ஆசிரியர்கள்- 664 என ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங் களை நிரந்தரப் பணியிடங்களாகத் தொடரலாம்.
அதேபோன்று, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் பணியிடம்-1, அலுவலக உதவியாளர்கள்-119, கண்கா ணிப்பாளர்கள்-35 ஆகியவை உள்பட ஆசிரியரல்லாத 351 தற்காலிக பணியிடங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கலாம். மேலும் தொழிற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 560 பணி யிடங்களை குழுவால் ஒழிவடையும் பணியிடங்களாக (வேனிஸிங் போஸ்ட்) அறிவிக்கப்பட்டு, இப்பணியிடங்களுக்கு பத்து ஆண்டுக ளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கலாம் மற்றும் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் போது சரண் செய்யலாம். இவற்றுக்கான ஒருங்கிணைந்த அரசாணை வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரி சீலனை செய்து 7,499 தற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியி டங்களாகவும், 351 பணியிடங்களுக்கு கடைசியாக தொடர் ஆணை வழங்கப்பட்டு, இந்த ஆணை முடிவடையும் நாளுக்கு அடுத்த நாள் முதல் பத்தாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கியும், 560 பணியி டங்களை ஒழிவடையும் பணியிடங்களாக அறிவித்து, அவற்றுக்கு 10 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கியும், பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும்போது இந்த பணியிடங்களை சரண் செய்ய அனுமதி வழங்க லாம் எனவும் முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
This news report indicates that the Tamil Nadu School Education Department has issued an order to make 7,499 temporary positions permanent.
Permanent Positions: 7,499 temporary teaching and non-teaching staff positions are being made permanent, including roles like Post Graduate Teachers, Headmasters, and Physical Education Directors.
Extension for Others: Approximately 351 other non-teaching temporary positions will receive a 10-year extension.
Vocational Staff: 560 vocational teacher and non-teaching positions are designated to be phased out ("vanishing posts") but will receive a 10-year extension until the current staff retire.
Government Order: This decision follows a review by a committee led by the Department Secretary, based on a request from the Director of School Education
Thursday, March 19, 2026
பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம் - அரசாணை வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.