பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.15,000-ஆக உயர்வு - மே மாத ஊதியமும் கிடைக்கும் - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 15, 2026

Comments:0

பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.15,000-ஆக உயர்வு - மே மாத ஊதியமும் கிடைக்கும் - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு



Monthly salary for part-time teachers to increase to Rs. 15,000 - May salary will also be available - Minister Anbil Mahesh announces - பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.15,000-ஆக உயர்வு - மே மாத ஊதியமும் கிடைக்கும் - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

ஜன. 14: தமிழக அரசுப் பள் ளிகளில் தொகுப்பூதியத்தில் பணி யாற்றிவரும் பகுதி நேர ஆசிரியர்க ளுக்கு மாத ஊதியம் ரூ.12,500-இல் இருந்து ரூ.15,000-ஆக உயர்த்தி வழங் கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித் துள்ளார்.

மேலும் கடந்த 13 ஆண்டுகளாக அவர்களுக்கு மே மாதத்தில் (விடு முறை காலத்தில்) ஊதியம் வழங்கப் படாத நிலையில், இனி அந்த மாதத் தில் ரூ.10,000 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுப் பள்ளிகளில் தையல், ஓவியம், கணினி, உடற்கல்வி, தோட்டக் கலை, கட்டடக்கலை உள் ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் 2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். தொடக்கத் தில் இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இவர்களுக்கு மாத ஊதிய மாக ரூ.12,500 வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள் வாரத்துக்கு மூன்று அரை நாள்கள் கற்பித்தல் பணிகளில் ஈடுபடுவர். தற்போதைய சூழலில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் உள் ளனர். மாத ஊதியம் குறைவாக ளதால் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இதற்கிடையே திமுகஆட்சிக்குவந் தால், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது அறிவிக் கப்பட்டது. அதை திமுக தனது தேர் தல் அறிக்கையில் 181-ஆவது வாக் குறுதியாகவும் அளித்திருந் தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண் டுகளாகியும் வாக்குறுதியை திமுக நிறை வேற்றாததால், பகுதி நேர ஆசி ரியர்கள் கடந்த ஜன.6- ஆம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத் தில் பள்ளிக் கல்வி அலுவலகம் அரு கில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த னர்.

இந்த நிலையில் பகுதி நேர ஆசிரி யர் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன் பில் மகேஸ் சென்னையில் உள்ள அவ ரது முகாம் அலுவலகத்தில் புதன்கி ழமை பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் ஆர்த்தி, பள்ளிக் கல்வித் துறை இயக் குநர் கண்ணப்பன், தொடக்க கல்வித் துறை இயக்குநர் நரேஷ் ஆகியோர் பங்கேற்றனர். ரியர்கள் போராட்டத்துக்கு தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்ப்பு ஏற் பட்ட நிலையில், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித் தார். இந்தப் பேச்சுவார்த்தையில் ஆசி பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமைச் சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: பொங்கல் நேரத் தில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட் டத்தில் ஈடுபடுவது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்ததும் பகுதி நேர ஆசிரி யர்களுக்கு மாத ஊதியம் ரூ.10,000-இல் இருந்து ரூ.2,500 உயர்த்தப்பட்டு ரூ.12,500-ஆக வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் ரூ. 2,500 உயர்த்தி ரூ.15,000-ஆகவழங்கப்படும். மே மாத ஊதியமும் கிடைக்கும்

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக் கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பகுதி நேர ஆசிரியர்க ளுக்கு இதுவரை மே மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. மே மாதம் விடு முறையாக கணக்கில் கொள்ளப்பட் டது. ஆனால் அவர்கள் தங்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும் எனவும், குடும்பத்தை நடத்துவதற்கு சிரமமாக உள்ளதாகவும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

அவர்களுக்கு 50 சதவீத ஊதியமாக ரூ.7,500 வழங்கலாம் என முடிவெ டுத்தோம்; ஆனால், அவர்கள் குறைந் தபட்சம் ரூ.10,000 ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத் தனர். இதைத் தொடர்ந்து மே மா தத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10,000 வழங்க வுள்ளோம்.

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக பள் ளிக்கல்வி துறை, சட்டத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகு முடிவு அறிவிக்கப்படும். மேலும், மத் திய அரசு, பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.3,548 கோடியை இன்னும் வழங்க வில்லை. இருப்பினும் தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் பள்ளி கல்வித் துறைக்கு உரிய நிதியை வழங்கி வரு கிறார். பகுதி நேர ஆசிரியர்களை இந்த அரசு ஒருபோதும் கைவிடாது என்றார் அவர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews