தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நம் பள்ளி, நம் பெருமை, என்ற தலைப்பில் பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி அரசினர் மேல் நிலைப்பள்ளியில் நம் பள்ளி, நம் பெருமை என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.
இதையும் படிக்க | மருத்துவர்கள் மேல்படிப்பிற்கு ஊக்க மதிப்பெண் பெற உரிமையில்லை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
அப்போது, கூட்டத்தில் பேசிய தலைமையாசிரியை ஏஞ்சலின்மெர்சி இப்பள்ளிக்கு வரும் மாணவர்கள் பலர் சரியாக தலை முடி வெட்டிக்கொண்டும், சீருடை அணிந்து கொண்டும் வருவதில்லை. முடியை, காடுபோல் வளர்த்துக் கொண்டு விதவிதமான ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டு வருகிறார்கள். இதனால், ஒரு மாணவனை சரியாக அடையாளம் காண முடியவில்லை. தற்போதுள்ள நிலையில், ஆசிரியர்களும் மாணவர்களை கண்டிக்க முடியவில்லை. அப்படி, கண்டித்தாலும் ஆசிரியர்களை மதிப்பது இல்லை. பெற்றோர்களாகிய நீங்கள் தான் உங்களது பிள்ளைகளை கண்டித்து ராணுவ வீரர் போல் முடிவெட்டி, நல்ல முறையில் சீருடை அணிந்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார். பள்ளியின், வளர்ச்சிக்காக பெற்றோர்கள் பலர் பல்வேறு கருத்துக்களை இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் விவாதித்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.