Breaking

Wednesday, June 21, 2023

கவுரவ விரிவுரையாளர்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஊதிய உயர்வு: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

Pay hike for honorary lecturers researchers: University of Chennai notification - கவுரவ விரிவுரையாளர்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஊதிய உயர்வு: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி சென்னை பல்கலை கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 20 ஆயிரமும், ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ. 15 ஆயிரமும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பளத்தை உயர்த்தி சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

சென்னை பல்கலைக்கழகத்தின் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமும், ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமும் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 16ம் தேதி நடந்த சிண்டிகேட் கூட்டத்திலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன்படியே இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog