சென்னை பல்கலை. துணைவேந்தர் கவுரி மீது முறைகேடு புகார்: விசாரணைக்கு ஆளுநர் அனுமதி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 09, 2023

Comments:0

சென்னை பல்கலை. துணைவேந்தர் கவுரி மீது முறைகேடு புகார்: விசாரணைக்கு ஆளுநர் அனுமதி?

சென்னை பல்கலை. துணைவேந்தர் கவுரி மீது முறைகேடு புகார்: விசாரணைக்கு ஆளுநர் அனுமதி வழங்கவில்லை

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எஸ்.கவுரி, 2020 ஆகஸ்ட் மாதம்நியமனம் செய்யப்பட்டார். இவர் மீது உயர்கல்வித் துறைக்கு பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் அனுப்பிய புகார் கடிதத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தியில் மல்டிமீடியா ஆராய்ச்சி மைய இயக்குநராக கவுரி இருந்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக சிஏஜி அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது. அவர் மீதானகுற்றச்சாட்டுகள் தீர்க்கப்படும்வரை அவரைவிடுப்பில் அனுப்ப வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தனர். இதுதவிர சென்னை பல்கலைக். துணைவேந்தராக பதவியேற்ற பிறகு நிதிப்பிரிவு போன்ற துணை அமைப்புகளின் ஆலோசனையை பெறாமல் பல்வேறு முக்கிய முடிவுகளை கவுரி எடுத்துள்ளார். சிண்டிகேட் ஒப்புதல் பெறாமல், டெண்டர் கோராமல் தனது இல்லத்தை ரூ.30 லட்சம் செலவில் பழுதுபார்த்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கவுரியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.

இதையடுத்து பல்கலை. வேந்தர் என்ற முறையில் விசாரணைக்கு ஆளுநரிடம் அனுமதி கேட்டு அவரது தனி செயலருக்கு கடந்த மார்ச் 9-ல் அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், ஊழல் தடுப்புச் சட்டம் (திருத்தம்) 2018 பிரிவு 17ஏ(1)-ன்கீழ் சென்னை பல்கலை. துணைவேந்தர் கவுரி மீதான குற்றச்சாட்டுகள் குறித்துமுதல்கட்ட விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், 5 மாதங்களாகியும் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து இதுவரை மாநில அரசுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews