Breaking

Tuesday, August 04, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.08.2026 | School Morning Prayer Activities


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.08.2026

மாணவர்களின் சிந்தனையைத் தூண்டவும், நற்பண்புகளை வளர்க்கவும், அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்ளவும் உதவும் 05.08.2026 ஆம் தேதிக்கான பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகளின் முழுத் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


1. திருக்குறள் (Thirukkural)

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 47 - தெரிந்து செயல் வகை
குறள் எண்: 465

"வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு."


பொருள்: முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.

2. பழமொழி & இரண்டொழுக்க பண்புகள்

பழமொழி (Proverb):
Laugh away your fears. — இடுக்கண் வருங்கால் நகுக.


இரண்டொழுக்க பண்புகள் (Two Virtues):
1. நான் எனது வாழ்நாளில் யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கிழைக்க மாட்டேன்.
2. என்னால் இயன்ற நன்மையை மற்றவர்களுக்குச் செய்வேன்.


3. பொன்மொழி & Thought for the Day

பொன்மொழி:
மழை இயற்கையின் வரம்; அதை பாதுகாப்பது மனிதனின் கடமை.

Thought for the Day:
When rain falls, hope rises.


4. பொது அறிவு வினாக்கள் (General Knowledge)

  • 1. தமிழ்நாடு அரசின் மாநில குறிக்கோள் எது?
    விடை: "வாய்மையே வெல்லும்."

  • 2. "சத்யமேவ ஜெயதே" என்பதை தமிழில் "வாய்மையே வெல்லும்" என மாற்றியவர் யார்?
    விடை: பேரறிஞர் அண்ணா.

5. ஆங்கிலச் சொற்கள் (English Words for Vocabulary)

  • Articulate: Speaks clearly (தெளிவாக பேசுபவர்).
  • Meticulous: Very careful (மிகுந்த கவனமானவர்).

6. புவியியலும் சுற்றுசூழலும் (Geography & Environment)

இந்தியாவின் காலநிலை:
இந்தியாவில் பெரும்பாலும் பருவமழைக் காலநிலை காணப்படுகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் நாட்டிற்குத் தேவையான மழையை வழங்குகின்றன.


7. NMMS மாதிரி வினா-விடை (SAT)

வினா: _______________ என்னும் பாசி, விண்வெளிப் பயணத்தின்போது கார்பன்-டை-ஆக்ஸைடை அகற்றுவதற்கும் மனிதக் கழிவுகளை மட்கச் செய்வதற்கும் பயன்படுகிறது.
(1) குளோரெல்லா ஃபைரினாய்டோசா
(2) அனபீனா
(3) லேமினேரியா
(4) ஜெலீடியம்

விடை: (1) குளோரெல்லா ஃபைரினாய்டோசா


8. இன்றைய சிறப்பாளர்: நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்தநாள் (ஆகஸ்ட் 05)

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong: ஆகத்து 5, 1930 – ஆகத்து 25, 2012) ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும், சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். இவர் வான்வெளிப் பொறியியலாளர், கடற்படை விமானி, வெள்ளோட்ட விமானி மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். பெர்டூ பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்று, தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவின் (தற்போதைய டிரைடன் விமான ஆராய்ச்சி மையம்) அதிவேக விமான நிலையத்தில் வெள்ளோட்ட விமானியாகச் சிறப்பான சேவையாற்றினார்.


9. நீதிக்கதை: மேகத்திற்குப் பின்னால் சூரியன்

ஒரு கிராமத்தில் அகில் என்ற 12ஆம் வகுப்பு மாணவன் வாழ்ந்து வந்தான். படிப்பில் நல்ல திறமை இருந்தாலும், பொதுத் தேர்வு நெருங்கியபோது அவனுக்கு அதிக மனஅழுத்தம் ஏற்பட்டது. "என்னால் நல்ல மதிப்பெண் எடுக்க முடியுமா?", "நான் தோல்வி அடைந்தால் என்ன செய்வேன்?" என்ற பயம் அவனை வாட்டியது.

முன்பு நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பேசிய அகில், தனியாக இருக்கத் தொடங்கினான். புத்தகத்தைத் திறந்தாலே பயம் வந்து, "என் வாழ்க்கை முடிந்துவிட்டது" என்று நினைக்க ஆரம்பித்தான். இதை அவனுடைய ஆசிரியர் கவனித்தார்.

ஆசிரியர் அவனை அழைத்து, வாடியிருந்த ஒரு சிறிய செடியைக் காட்டி, "இந்தச் செடி இரண்டு நாட்கள் தண்ணீர் இல்லாமல் வாடிவிட்டது. இதனால் இது இனி வளராது என்று சொல்வாயா?" என்று கேட்டார். அகில், "இல்லை ஐயா, தண்ணீர் ஊற்றி பராமரித்தால் மீண்டும் வளரும்" என்றான்.

ஆசிரியர் சிரித்தபடி, "அதேபோலத்தான் மனமும். சில நாட்கள் மனஅழுத்தம் வந்ததால் வாழ்க்கை முடிந்துவிடாது. உதவி கேள், ஓய்வு எடு, நம்பிக்கையை விடாதே. மேகங்கள் சூரியனை மறைக்கலாம்; ஆனால் சூரியனை அழிக்க முடியாது" என்றார்.

ஆசிரியரின் வார்த்தைகள் அகிலுக்குப் புதிய தைரியத்தை அளித்தன. அவன் சந்தேகங்களைக் கேட்டுப் படித்து, மனஅழுத்தம் நீங்கி, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றான்.

நீதி: கஷ்டங்களும் மனஅழுத்தமும் தற்காலிகமானவை. நம்பிக்கையுடனும் உரிய வழிகாட்டுதலுடனும் செயல்பட்டால் எந்தச் சவாலையும் கடந்து வெற்றி பெறலாம்.


10. இன்றைய முக்கியச் செய்திகள் (News Headlines - 05.08.2026)

தமிழ் செய்திகள்:

  • 🗒️ முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட மாநில மன்றக்கூட்டம் நடைபெற்றது.
  • 🗒️ இந்திய ரெயில்வே ஜூலை மாதத்தில் 14 கோடி டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
  • 🗒️ உலகின் மிக இளம் வயது பேராசிரியர் என்ற சாதனையை அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த நாதன் தாமஸ் (18 வயது) படைத்துள்ளார்.
  • 🏀 சிட்டி ஓபன் டென்னிஸ்: இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அலெக்சாண்டர் ஈலா சாம்பியன் பட்டம் வென்றார்.
  • 🏀 டி20 கிரிக்கெட்: கடைசி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

Today's English Headlines:

  • 🗒️ A State Council meeting on the development plans for Scheduled Castes and Scheduled Tribes was held under the leadership of Chief Minister Vijay.
  • 🗒️ Indian Railways handled a record 140 million tonnes of goods in July.
  • 🗒️ Nathan Thomas, an 18-year-old from Florida, USA, has become the world's youngest professor, breaking a 306-year-old record.
  • 🏀 Citi Open Tennis: Alexandra Eala won the championship title in an exciting final match.
  • 🏀 T20 Cricket: Pakistan defeated Sri Lanka in the final match to win the series.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog