தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வாரம் பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 17, 2022

Comments:0

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வாரம் பயிற்சி

Elementary school teachers working in government schools have been ordered to provide one week of counting and writing training. In this regard, a circular has been sent to the Primary Education Officers on behalf of SCERT, the State Educational Research and Training Institute, the Curriculum Preparation Division of the Department of School Education:

Counting and writing training classes for the coming academic year have been arranged for government school teachers working in primary and secondary schools. As a first step, six days of training classes will be conducted in Madurai from the 23rd to the 28th for the lecturers and teachers who will act as the primary facilitators.

After the primary counselors have completed their training, training classes should be conducted for other teachers through the primary counselors as soon as the schools reopen. NCERT சார்பில் ஒரு வாரம் பயிற்சி

அரசு பள்ளிகளில் பணியாற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஒரு வாரம் எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறையின் பாட திட்ட தயாரிப்பு பிரிவான, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் கல்வி ஆண்டுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக, முதன்மை கருத்தாளர்களாக செயல்படும் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும், 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை, மதுரையில் ஆறு நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

முதன்மை கருத்தாளர்கள் பயிற்சியை முடித்த பின், பள்ளிகள் திறந்ததும், மற்ற ஆசிரியர்களுக்கு முதன்மை கருத்தாளர்கள் வழியே, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews