இனி பாடபுத்தகத்தில் இந்தியாவிற்கு பதிலாக பாரத்
என்சிஇஆர்டி ன் ஆலோசனை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்
12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பாரத் என்று மாற்றுவதற்கு என்சிஇஆர்டி ஒப்புதல் அளித்துள்ளது.இனி என்சிஇஆர்டி யின் கீழ் தயாரிக்கப்படும் அனைத்து பாடப்புத்தகங்களிலும் பாரத் என்ற வார்த்தையே இருக்கும். இந்தியாவுக்கு பதில் பாரத் - NCERT பரிந்துரை!
சி.பி.எஸ்.இ. பாட புத்தகங்களில் 'இந்தியா' என்ற வார்த்தைக்கு பதிலாக 'பாரத்' என மாற்ற என்.சி.இ.ஆர்.டி. குழு பரிந்துரை - கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்!
ஏற்கனவே ஜி20 மாநாடு அழைப்பிதழிலும், பிரதமர் மோடியின் மேஜையிலும் | இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என குறிப்பிட்டிருந்ததற்கு எதிர்ப்பு எழுந்தது!
பள்ளி பாடப் புத்தகங்களில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என மாற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைத்த குழு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மூலம் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்படுகின்றன. அடுத்த கல்வியாண்டில் தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யவும் இந்த கவுன்சில் பல்வேறு நிபுணர்களை கொண்டு குழுக்களை அமைத்துள்ளது.
இந்த நிலையில், சமூக அறிவியல் பாடத்திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, பாடப்புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என அச்சடிக்க பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பரிந்துரையை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்ட நிலையில், இனி அச்சடிக்கப்படும் NCERT-ன் பாடப்புத்தகங்கள் அனைத்திலும் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என்ற பெயரே இடம்பெறலாம் என்று யூகிக்கப்படுகிறது.
இதே போன்று, இந்திய வரலாறு பாடப்புத்தகத்தில் பண்டைய வரலாறு என்ற தலைப்புக்கு பதிலாக, கிளாசிக்கல் வரலாறு என்ற பெயர் மாற்றவும், இந்திய அறிவு அமைப்பை பிரதானப்படுத்தவும் அந்த குழு பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.