சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க
5.30 லட்சம் தடுப்பூசி மருந்தை தமிழகத்துக்கு அனுப்பியது மத்திய அரசு
பள்ளிகளில் செலுத்தும் பணி தீவிரம்
கர்ப்பப்பை வாய் புற்று நோயை தடுக்க 14 வயதுடைய சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத் தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 5.30 லட் சம் தடுப்பூசியை தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.
உலக அளவில் மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடி யாக, கர்ப்பப்பை வாய் புற்று நோயால்தான் பெண்கள் அதி கம் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் இந்த நோயால் பாதிக்கப்படும் பெண்களில் 25 சதவீதம் பேர் இந்தியர்களாக உள்ளனர். இந்தியாவில் ஆண்டு தோறும் சராசரியாக 80 ஆயிரம் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படு கின்றனர்.
இலவசமாக செலுத்தப்படும்
இதை கருத்தில் கொண்டு, பெண்களுக்கு வளரிளம் பரு வத்திலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத் தும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, நாடு முழுவதும் 14 வயதுடைய சிறுமிகளுக்கு 'ஹெச்பிவி' தடுப்பூசியை இலவசமாக செலுத்தும் திட் டத்தை பிரதமர் மோடி கடந்த பிப்.28-ம் தேதி தொடங்கி வைத் தார். இந்த திட்டம் மூலம் தமிழகத் தில் 7 லட்சம் சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதற்காக, இதுவரை 5.30 லட் சத்துக்கும் மேற்பட்ட தடுப் பூசியை தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
பள்ளிகள், அரசு மருத்துவ மனைகளில் பொது சுகாதாரத் துறை மூலமாக சிறுமிகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத் தப்பட்டு வருகிறது.
The article details a central government initiative to combat cervical cancer in Tamil Nadu by distributing 5.3 lakh doses of the HPV vaccine for girls aged 14.
This campaign is being actively implemented in schools and government hospitals across the state to reduce the high incidence of cervical cancer among women.
The central government has sent 5.3 lakh vaccine doses to Tamil Nadu to prevent cervical cancer in young girls.
Vaccinations are being administered free of charge to girls aged 14 in schools and government hospitals.
The nationwide initiative aims to vaccinate 7 lakh girls in Tamil Nadu.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.