TN BUDGET - அரசு ஊழியர் சங்கங்களின் அதிருப்தி அறிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 21, 2023

Comments:0

TN BUDGET - அரசு ஊழியர் சங்கங்களின் அதிருப்தி அறிக்கை!

IMG-20230321-WA0011
TN BUDGET - அரசு ஊழியர் சங்கங்களின் அதிருப்தி அறிக்கை!

, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக, எந்தவித அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியிடப்படாததற்கு, பல்வேறு சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

தலைமைச் செயலக சங்கத் தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் அறிக்கை:

பழைய ஓய்வூதிய திட்டம் அமல், காலியாக உள்ள, 3.50 லட்சம் பணியிடங்களை நிரப்புதல் போன்றவை குறித்து, பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் வெளியிடாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
IMG-20230321-WA0010
தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடியை களைவதற்கான வழிமுறைகள் குறித்து, எந்த நிலைப்பாடும் வெளியிடப்படவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதார தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத் தலைவர் குமார்:

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து உள்ளது. தற்காலிக பணியாளர்களாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுவோருக்கு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குவது குறித்த அறிவிப்பும் இல்லை.

தி.மு.க., அரசின் மூன்றாவது பட்ஜெட், அரசு பணியாளர்களை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.
IMG_20230321_111022
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட்:

அனைத்து துறை பள்ளிகள் ஒருங்கிணைப்பு வரவேற்கத்தக்கது.

தி.மு.க., தேர்தல் அறிக்கை வாக்குறுதியான, புதிய பென்ஷன் திட்டம் ரத்து, ஊதிய முரண்பாடை களைதல், ஊக்க ஊதியம், அகவிலைப்படி நிலுவைத்தொகை மற்றும் ஊதியக்குழுவின், 21 மாத நிலுவை தொகை வழங்குதல் போன்ற நீண்ட கால கோரிக்கைகள் குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான முக்கிய அம்சங்கள், பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84671133