SBI வங்கியில் 5000 எழுத்தர் காலிப்பணியிடங்கள் – மே 17க்குள் விண்ணப்ப பதிவு - Download Notification Pdf& Apply Online - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 30, 2021

Comments:0

SBI வங்கியில் 5000 எழுத்தர் காலிப்பணியிடங்கள் – மே 17க்குள் விண்ணப்ப பதிவு - Download Notification Pdf& Apply Online

பாரத ஸ்டேட் வங்கியில் (State Bank of India) காலியாக உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அந்த தேர்வு ஜுன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பல்கலைக்கழகம் மேலும் 3 நாட்களுக்கு மூடல் – புதுச்சேரி அரசு அறிவிப்பு!! எழுத்தர் பணி:
இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தர் பணிக்கான இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பட்டப்படிப்பு முடித்தவர்களாகவோ அல்லது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களாகவோ இருக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயது வரம்பு 28 ஆக இருக்க வேண்டும்.
மேலும் இந்த தேர்வில் பங்குபெறும் எஸ்சி மற்றும் எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு என்ற அடிப்படையில் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தவிர எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் எழுத்தர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத்தேர்வு மற்றும் முதன்மைத்தேர்வு உட்பட 2 தேர்வுகளை உள்ளடக்கிய எழுத்துத்தேர்வில் முதல்நிலைத்தேர்வு ஆன்லைன் வழியிலாக நடத்தப்பட்டவுள்ளது. மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை
ஜூன் மாதம் நடைபெறும் இந்த முதல்நிலைத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு ஆன்லைன் வழியாக ஜூலை 31ஆம் தேதி முதன்மைத்தேர்வு நடைபெறும். மேற்குறிப்பிட்டவைகளில் தகுதியுடைய நபர்கள் www.sbi.co.in/careers என்ற இணையதளத்தை பயன்படுத்தி மே மாதம் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வங்கி எழுத்தர் பணிக்கு 29 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். பட்டப்படிப்பு முதலிய கல்வித்தகுதி அடிப்படையில் இன்கிரிமென்ட் கிடைக்கும். எழுத்தர் பணியில் இருப்பவர்கள் துறைத்தேர்வு எழுதி அதிகாரியாகப் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகளும் உண்டு.
Download Notification 2021 PDF
Apply Online

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews