12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 23, 2022

Comments:0

12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்

பணிநிரந்தரம்

-----------------------------

12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள் ----------------------------------------

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கைபடி பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

2012-ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாநிலம் முழுவதும் இவர்கள் பணியில் அமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள்.

உடற்கல்வி ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளான கணினிஅறிவியல் இசை தையல் தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன் ஆகிய கல்விஇணைச் செயல்பாடுகளை மாணவர்களுக்கு கற்று தருகிறார்கள்.

ரூபாய் 5ஆயிரம் என்ற ஆரம்ப சம்பளம், தற்போது ரூபாய் 10ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.

அதே சமயம் 16ஆயிரத்து 549 பேரில், 12ஆயிரம் பேர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள்.

10ஆண்டுக்கும் மேல் பணிபுரியும் போதும் இன்னும் நிரந்தரம் செய்யப்படாததால், இந்த குறைவான சம்பளத்தால் இவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

தற்போதுள்ள விதிமுறையை திருத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

இல்லை என்றால் சிறப்பாசிரியர்கள் நிலையில் பணியமர்த்தி புதிய அரசாணையை அமுல் செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது :

மாண்புமிகு முதல்வர் அவர்கள் அரசு நிகழ்ச்சிகளுக்காக கடலூர் விழுப்புரம் திருவாரூர் கிருஷ்ணகிரி சேலம் தருமபுரி மதுரை திருப்பூர் திருவள்ளூர் திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வந்தபோது பணிநிரந்தரம் வேண்டி கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம்.

மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை பள்ளிக்கல்வி வளாகத்தில் செப்டம்பர் 18ந்தேதி நடந்த கலந்தாலோசனை கூட்டத்திலும் பணிநிரந்தரம் வலியுறுத்தி உள்ளோம். மேலும் கடலூர் சேலம் மதுரை தஞ்சாவூர் திருச்சி திருவாரூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களிடம் நேரில் கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம்.

மக்களை தேடி முதல்வர் நிகழ்ச்சி நடந்த தஞ்சாவூர் தருமபுரி திருவாரூர் திருச்சி கடலூர் ஆகிய மாவட்டங்களில் பணிநிரந்தரம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம்.

தபால் மற்றும் ஈமெயில் மூலமாக கோரிக்கை மனு அனுப்பி வலியுறுத்துகிறோம்.

சமூக வலைத்தளங்கள் ட்விட்டர் பேஸ்புக் மூலமும் பணிநிரந்தரம் கோரிக்கை அனுப்புகிறோம்.

இது தவிர 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் திருச்செங்கோடு MLA ஈ.ஆர்.ஈஸ்வரன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பெண்ணாகரம் MLA கோ.க.மணி ஆகியோர் பணிநிரந்தரம் கேட்டு பேசி கோரிக்கை வைத்து உள்ளார்கள்.

2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த சட்டசபையில் அதிமுக ஒரத்தநாடு MLA ரெ.வைத்திலிங்கம் பணிநிரந்தரம் குறித்து பேசினார்.

அப்போது பதில் தெரிவித்து பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கைபடி செய்வோம் என்றார். மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி MLA தி.வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கந்தர்வகோட்டை MLA மா.சின்னதுரை ஆகியோர்கள் பணிநிரந்தரம் கேட்டு பேசி கோரிக்கை வைத்து உள்ளார்கள். பணிநிரந்தரம் செய்வோம் என மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் பேட்டியில் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனை அரசாணையாக வெளியிட வேண்டுகிறோம். தற்போது 12ஆயிரம் பேருக்கும் மாதம் ரூபாய் 10ஆயிரம் சம்பளம் கொடுக்க அரசுக்கு 13 கோடி ஆகிறது. இதை இடைநிலை ஆசிரியர் நிலையில் பணியமர்த்த மாதம் ஒன்றுக்கு மேலும் 20கோடி செலவிட நேரும். அரசு இதை இந்த வேலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் விதவைகள் ஏழைகள் நிலை உயர மனிதாபிமானத்தோடு செய்ய வேண்டுகிறோம். --------------------------------------

சி. செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

செல் : 9487257203

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews