தமிழகத்தில் 13 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் – அரசுக்கு கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 06, 2021

1 Comments

தமிழகத்தில் 13 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் தையல், இசை, கணினி அறிவியல் தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்ற பிரிவிற்கு நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோரிக்கை:
தமிழகத்தில் பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு மாறாக பகுதி நேர ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் தையல், இசை, கணினி அறிவியல் தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்றவற்றை அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட வேலையில் பல பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் பணிக்கு வரும் இவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சாமனப்பள்ளி க்கு வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், பகுதிநேர ஆசிரியர் முன்னேற்ற ஒருங்கிணைப்பு குழு சார்பில், முதல்வரின் நிவாரண நிதிக்கு, ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 483 ரூபாய்க்கான டி.டி., மற்றும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என கூறியதற்கு நன்றி தெரிவித்து 13 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். தமிழ்நாடு வீடியோ போட்டோகிராபர் அசோசியேஷன் சார்பில், மாநில தலைவர் மாதேஸ்வரன் தலைமையில், கொரோனா நிவாரண நிதியாக, இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் புகைப்பட துறைக்கு தனி நலவாரியம் அமைக்க, கோரிக்கை மனு அளித்தனர். தற்போது பணி நிரந்தரம் மனு பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

1 comment:

  1. சொன்னதை செய்வார் மாண்புமிகு தமிழகமுதல்வர் அவர்கள்,நம்பிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள்.. தகவல் பதிவுக்கு நன்றி கணிணிகல்வி

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews