🔴🔴 *பகுதிநேர ஆசிரியர்களின், 10 ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா?*
*தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை உள்ளிட்ட 12000 பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.*
*மாதத்தில் 12 அரை நாள் பணிபுரிவதால், மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.*
*இருப்பினும் இவர்கள் தங்கள் திறமையினால், மாணவர்கள் பல்வேறு சாதனைகள் புரிய காரணமாக இருக்கின்றனர்.*
*10 வருடங்களாக பணிபுரியும் இவர்களுக்கு, ரூ.10ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.*
*ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஊதியம் வழங்கப்படுவதில்லை.*
*குறைந்த ஊதியத்தில் வாழ்க்கையை நடத்த முடியாமல், பலர் வறுமையில் வாடி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.*
*பலர் பணியிலிருந்து ஓய்வு பெற்றும், பலர் ஓய்வு பெறும் நிலையிலும் உள்ளனர்.*
*இவர்களுக்கு அரசு ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடிய, எந்த சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.*
*குறிப்பாக பணி இடமாறுதல், மகப்பேறு விடுப்பு, ஊதிய உயர்வு, இறந்தவர்களுக்கு வழங்கப்படும் பணபலன்கள் போன்றவையாகும்.*
*எனவே மாணவர்கள் மற்றும் 12000 குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு, இவர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.*
*திமுக தனது தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்திருந்தனர்.*
*தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்து, சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.*
*பகுதி நேர ஆசிரியர்களின் 10 ஆண்டு கோரிக்கையான பணி நிரந்தர அறிவிப்பு, 27-08-2021 அன்றைய பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்படுமா என 12 ஆயிரம் குடும்பங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.*
Search This Blog
Tuesday, August 10, 2021
Comments:0
பகுதிநேர ஆசிரியர்களின், 10 ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.