Breaking

Sunday, June 14, 2026

அரசு பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்: கல்வித் துறை உத்தரவு



அரசு பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்: கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்​ளி​களில் 250 மாணவர்​களுக்கு ஓர் உயர்கல்வி வழி​காட்டி ஆசிரியர் இருக்க வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் படிக்​கும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையி​லான மாணவர்​களுக்கு உயர்​கல்வி குறித்த வழி​காட்​டு​தல்​களை வழங்​கி, சேர்க்​கையை உறுதி செய்​வதற்​காக, பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் ‘உயர்​கல்வி வழி​காட்டி திட்​டம்’ செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

இத்​திட்​டத்​தின்​கீழ் ஒவ்​வொரு அரசு உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​யிலும், வகுப்பு ஆசிரியர்​கள் உயர்​கல்வி வழி​காட்​டிகளாக நியமிக்​கப்​படு​கின்​றனர். கல்​லூரிக் கல்​வி, தொழிற்​கல்வி படிப்​பு​கள் மற்​றும் அதற்​கான நுழைவுத் தேர்​வு​கள் குறித்த தகவல்​களை அவர்​கள் மாணவர்​களுக்கு தெரிவிக்​கின்​றனர். பின்​தங்​கிய மற்​றும் சிறப்பு கவனம் தேவைப்​படும் மாணவர்​களைக் கண்​டறிந்​து, அவர்​கள் உயர்​கல்​வியைத் தொடர்​வதை உறுதி செய்​வதற்​கான நடவடிக்​கைகளை​யும் மேற்​கொள்​கின்​றனர்.

இந்​நிலை​யில், இத்​திட்​டம் தொடர்​பாக மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​களுக்கு மாதிரிப் பள்​ளி​கள் உறுப்​பினர் செயலர் இரா.சுதன் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

உயர்​கல்வி வழி​காட்டி திட்​டத்​தின் கீழ் கடந்த 2023-ம் ஆண்டு முதல் அரசுப் பள்​ளி​களில் உயர்​கல்வி வழி​காட்டி ஆசிரியர்​களை நியமிக்க தலைமை ஆசிரியர்​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டது. அந்த ஆசிரியர்​களின் பெயர்​களை ‘எமிஸ்’ தளத்​தில் பதிவு செய்​யு​மாறும் அறி​வுறுத்​தப்​பட்​டது.

ஜூன் 30-ம் தேதிக்குள்..

அனைத்து மாணவர்​களுக்​கும் உயர்​கல்வி பற்​றிய விழிப்​புணர்வு மற்​றும் தகவல்​கள் முழு​மை​யாக சென்​றடைந்​தால் மட்​டுமே அவர்​கள் உயர்​கல்வி தொடர்​வதை உறு​தி​செய்ய முடி​யும்


மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்ட ஆசிரியர் குழு A team of teachers to guide students on higher education.

அரசு பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு, உயர் கல்விக்கு வழிகாட்ட ஆசிரியர்களை நியமிக்கும்படி, மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்ட, 250 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில், 'எமிஸ்' இணையதளத்தின் வாயிலாக, வரும் 30ம் தேதிக்குள், ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டும்.

அவர்கள், மாணவர்களுக்கு உயர் கல்வி சார்ந்த விழிப்புணர்வையும், முழுமையான தகவல்களையும் அளித்து, உயர் கல்வியை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog