கவுரவ விரிவுரையாளர்கள் 1,524 பேர் நியமிக்க அனுமதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 02, 2025

Comments:0

கவுரவ விரிவுரையாளர்கள் 1,524 பேர் நியமிக்க அனுமதி



கவுரவ விரிவுரையாளர்கள் 1,524 பேர் நியமிக்க அனுமதி

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இரண்டாம் சுழற்சி பாடவேளை துவங்க உள்ள நிலையில், 1,524 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அரசு அனுமதி அளித்துஉள்ளது.

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், கூடுதலாக, 15,000 மாணவர்களை சேர்க்கும் வகையில், இரண்டாம் சுழற்சி எனும், 'ஷிப்ட் 2' பாடவேளை துவக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், 15,354 மாணவர்கள் கூடுதலாக சேருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், முதலாம் ஆண்டு பாடப்பிரிவுகளுக்கு, 421; இரண்டாம் ஆண்டு பாடப்பரிவுகளுக்கு 403; மூன்றாம் ஆண்டு பாடப்பிரிவுகளுக்கு 406 என, 1,230 கவுர விரிவுரையாளர்கள் தேவை. அவர்களுக்கு, தலா 25,000 ரூபாய் வீதம், 11 மாத சம்பளத்துக்கு, 32.77 கோடி ரூபாய் தேவைப்படும்.

மேலும், புதிதாக துவக்கப்படும், 49 பாடப்பிரிவுகளுக்கு, மூன்றாண்டுகளுக்கும் சேர்த்து, 294 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஊதியமாக, 7.74 கோடி ரூபாய் தேவைப்படும். இதை அனுமதிக்க வேண்டும் என, அரசுக்கு உயர்கல்வித்துறை கருத்துரு அனுப்பியது.

அத்துடன் புதிய பாடவேளைக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான நிதி தேவை குறித்தும், உயர்கல்வித்துறை விளக்கி உள்ளது. விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அரசு ஒப்புதல் அளித்துள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews