நேர்காணல் முறையில் கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு: கூட்டமைப்பினர் கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 07, 2022

Comments:0

நேர்காணல் முறையில் கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு: கூட்டமைப்பினர் கோரிக்கை

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த தமிழ்நாடு அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் பொதுச் செயலாளர் அருணகிரி, மாநிலத் தலைவர் செந்தில் குமார் அளித்த பேட்டி:

அரசு கலைக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு 2019ல் நேர் காணல் முறையின் கீழ் 2,331 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் விண்ணப்பித்தவர்களுக்கு சான்று சரிபார்ப்பும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், எழுத்து தேர்வு முறைக்கு தயாராக இருங்கள் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பித்து, கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருவோருக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. அதனால், பணி அனுபவ முறையின் கீழ் விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மாநில தகுதித் தேர்வு 5 ஆண்டுகளாக நடத்தவில்லை. அதனால் விரைந்து தகுதித் தேர்வை நடத்த வேண்டும். கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews