மறைந்த முப்படை தலைமை தளபதிக்கு அரசு பள்ளி மாணவர்கள் அஞ்சலி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 10, 2021

Comments:0

மறைந்த முப்படை தலைமை தளபதிக்கு அரசு பள்ளி மாணவர்கள் அஞ்சலி

மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மனைவி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுடன் கோவை, சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியாகினர். அவர்களுக்கு இந்தியா முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம் அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் தணிகைஅரசு, ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, பள்ளி ஆசிரியர்கள் லதா சேகர் சீனுவாசன், கலைவாணன், பொற்கொடி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் செங்குட்டுவன் உள்பட பலர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் கூரம் விஸ்வநாதன், நகரத் தலைவர் அதிசயம் குமார், நகர பொது செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட பட்டியலின தலைவர் சிலம்பரசன், ரயில்வே வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். சங்கரமடம் இரங்கல்: காஞ்சிபுரம் சங்கரமட மேலாளர் சுந்தரேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:பாரத தேசத்தின் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் அதிகாரிகள் அகால மரணம் அடைந்தது துரதிஷ்டவசமானது. அவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.ஜெனரல் ராவத், நமது நாட்டின் முப்படைகளின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பல உயரிய நிலையில் மிகத் திறம்பட பணியாற்றியவர்.

இந்திய ராணுவத்தின் முதல் முப்படை தளபதி என்ற பெருமைக்குரியவர். அவரது தியாகமும் நாட்டுக்கான அவர் செய்த சேவைகளும் எதிர்கால தலைமுறைக்கு என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கவை என கூறப்பட்டுள்ளது.மாமல்லபுரம்: மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை நுழைவாயில் அருகே டாக்டர் அம்பேத்கர் இசிஆர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதில், ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் சரவணன், செயலாளர் லோகநாதன், பொருளாளர் தாமஸ், சிந்தனை சிவா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews