கோவை வேளாண் பல்கலை முதலாமாண்டு மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 11, 2022

Comments:0

கோவை வேளாண் பல்கலை முதலாமாண்டு மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

கோவை வேளாண் பல்கலை முதலாமாண்டு மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!
கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலைகழகத்தில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வருபவர் பழனி. இவரது மகன் பிரோதாஸ் குமார் (19) கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். மாணவர் பிரோதாஸ் குமார், இளங்கலை வனவியல் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்து வந்த நிலையில், அந்த துறை கிடைக்காததால், பயோ டெக் படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரோதாஸ் குமார் பல்கலைகழகத்தின் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், விருப்பப்பட்ட துறை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த மாணவர் பிரோதாஸ் குமார் ஏற்கனவே ஒருமுறை வீட்டில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை பெற்றோர்கள் சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும், மாணவர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா..? என்பது குறித்து, விடுதியில் உடன் தங்கியிருந்த மாணவர்கள், அவரது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews