Breaking

Wednesday, October 06, 2021

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மர்ம மரணம் - கொலையா? என போலீசார் விசாரணை

தலைமை ஆசிரியர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 58). இவர் ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு உஷாராணி என்ற மனைவியும், காவியக்கண்ணி, சரண்யா என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில் மகள்கள் இருவரும் என்ஜினீயர் ஆவார்கள். உஷாராணி உஞ்சினி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த செல்வராஜ், மாலையில் பள்ளி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இந்நிலையில் அவர் சோழன்குறிச்சி அய்யனார் கோவில் அருகில் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அதனை கண்டு அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து, செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வராஜின் கழுத்தில் காயம் இருப்பதால், அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக செல்வராஜின் உறவினர்கள் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து செல்வராஜுக்கு ஏதேனும் முன்விரோதம் இருந்ததா?, அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog