நீட்தேர்வில் வெற்றி பெற்றும் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மாணவி தற்கொலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 26, 2021

Comments:0

நீட்தேர்வில் வெற்றி பெற்றும் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மாணவி தற்கொலை

நீட்தேர்வில் வெற்றி பெற்றும் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காததால் பேராவூரணி அருகே மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (46). இவரது மனைவி நாகூர் மாலா (40). இவர்களது மகள் துளசி(18). 2018 ஆம் ஆண்டு பேராவூரணி தனியார் பள்ளியில் (455/500) மதிப்பெண் பெற்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் (421/600) மதிப்பெண் பெற்று பிளஸ்-2 தேர்ச்சி பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதி வெற்றிபெற்றும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு திருச்சி அருகே துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்றுள்ளார். தற்போது நடைபெற்று முடிந்த நீட் தேர்விலும் அவர் 306 மதிப்பென் பெற்றும் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் துளசி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் பொறியியல் அல்லது அக்ரி படிப்பில் சேருவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பணம் கட்டிய நிலையில், மேலும் பாக்கிப் பணம் தரவேண்டும் என்று சொல்லி சான்றிதழ்களை தர காலதாமதப்படுத்தி பொறியியல் கவுன்சிலிங் முடிந்தபிறகு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வேறு படிப்பிலும் சேர முடியவில்லை என்று துளசி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வெள்ளைச்சாமி, நாகூர் மாலா இருவரும் சனிக்கிழமை வயலுக்கு வேலைக்கு சென்று விட்டனர். பெற்றோர் வெளியில் சென்ற நேரத்தில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஓட்டு வீட்டின் கூரையில் துளசி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மாலை வீட்டிற்கு திரும்பிய பெற்றோர், துளசி தூக்கிட்டு தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் துளசியின் சடலத்தை மீட்டனர்.

இதுகுறித்து ஊமத்தநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் பேராவூரணி போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்த போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மாணவியின் மரணம் குறித்து தகவல் அறிந்த எம்எல்ஏ அசோக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பெற்றோரை சந்தித்து நடந்த விவரங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினார். மாணவி நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டது குறித்து முதல்வருக்கு தகவல் தெரிவித்ததாக கூறினார்.

பேராவூரணி வட்டாட்சியர், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews