தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் – புகார்களை அனுப்புவது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 08, 2021

Comments:0

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் – புகார்களை அனுப்புவது எப்படி?

மக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களை உடனடியாக தமிழக முதல்வரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் செயல்பட்டு வருகிறது. அவற்றை பயன்படுத்தி புகார்களை சமர்ப்பிக்கும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம்
தமிழக மக்கள் தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ள முதல்வருடன் ஒரு நேரடி தொடர்பை உண்டாக்கும் விதத்தில் முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் உங்கள் ஊரில் உள்ள பொதுவான பிரச்சனைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை மனுவாக அனுப்பலாம். இந்த மனு தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்றி தரும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு மேற்கொள்ளும் நலத்திட்ட உதவிகள், செயல்பாடுகள் அனைத்திலும் கட்சியின் சின்னமோ, பெயரோ, புகைப்படமோ எதுவும் இடம்பெறவில்லை. அதே போல தான் முதல்வரின் தனிப்பிரிவு இணையதளமும் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது உங்கள் புகார்களை முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் மூலம் தெரிவிக்க, http://cmcell.tn.gov.in/register.php மற்றும் http://cmcell.tn.gov.in/iogin.php என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.
இதில் உங்கள் புகார்களை தெரிவிக்க பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்றி உங்கள் புகார்களை அனுப்பலாம். இதை விட எளிதான வகையில் புகார்களை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியும், தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தபால் மூலம் உங்கள் புகார்களை தெரிவிக்க, Chief Minister’s Special Cell, Secretariat, Chennai – 600009, Phone No: 044-2567 1764, Fax No: 044-2567 6929 என்ற முகவரியும், cmcell@tn.gov.in என்ற மின்னஞ்சலும் கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews