Breaking

Wednesday, June 09, 2021

முதலமைச்சர் ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடக்கம்.

முதலமைச்சர் ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடக்கம்.
cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம்.
தமிழக முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. www.cmcell.tn.gov.in/register.php என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. முதல்வரின் தேர்தல் பிரசாரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog