அரசுப்பள்ளி மாணவரின் பொறுப்பான செயலுக்கு குவியும் பாராட்டு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 27, 2026

Comments:0

அரசுப்பள்ளி மாணவரின் பொறுப்பான செயலுக்கு குவியும் பாராட்டு!



அரசுப்பள்ளி மாணவரின் பொறுப்பான செயலுக்கு குவியும் பாராட்டு!

சென்னை கொரட்டூர் பகுதியில் ஓய்வு பெற்ற காவலர் தனது பேரனுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது அவரது கால் சட்டையிலிருந்து பணப்பை தவறி கீழே விழுந்தது.

சாலையில் அங்கு நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் அந்த பணப்பையை எடுத்து மறைத்துக் சினம் கொண்டதாக தெரிகிறது.

இதனைக் கண்ட அரசு பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவன் யாதேஸ்வரன் (15) உடனே அப்பெண்ணிடம் சென்று கீழே விழுந்தது முதியவரின் பணப்பை எனக்கூறி அதனை வாங்கி உள்ளார். அப்பெண் எடுத்து வைத்திருந்த பணத்தையும் பெற்று மீண்டும் பணப்பைக்குள் வைத்து அதனை காவல்துறை அதிகாரியிடம் பொறுப்புடன் ஒப்படைத்துள்ளார்

மாணவரின் நேர்மையை போற்றும் வகையில் அவரை ஆவடி இணை ஆணையர் சிவக்குமார் நேரில் அழைத்து தான் எழுதிய 'என்னுள் நான்' என்னும் புத்தகத்தை வழங்கி பாராட்டினார்

மாணவரின் செயலை ஊக்கப்படுத்தும் வகையில் முதியவர் கொடுத்த பரிசு மற்றும் பரிசுத்தொகையையும் யாதேஸ்வரன் வாங்க மறுத்துவிட்டார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews