Breaking

Tuesday, April 21, 2026

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல்!!(பத்திரிகை செய்தி)



அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல்!!(பத்திரிகை செய்தி)

Government-aided school teachers in Tamil Nadu may face salary delays for the month of May due to a delay in the government allocating funds for the current financial year.

The School Education Department has not yet released the budget funds, which are typically allocated by April 2nd.

Without fund allocation, the salary bills and other financial benefit lists cannot be sent to the treasury.

Teachers and staff are unlikely to receive their salaries on the last working day of the month as scheduled.

அரசு உதவி பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல்

தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளி களில் பணிபுரியும், ஆசிரி யர்களின் ஊதியத்துக்கான நிதியை அரசு ஒதுக்காத தால், அவர்கள் மே மாதம் ஊதியம் பெறுவதில் சிக் கல் ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை, ஒவ்வொரு நிதியாண்டும் ஏப்., 2ம் தேதிக்குள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசி ரியர்கள் மற்றும் ஊழியர் களின் சம்பளத்துக்கான நிதியை ஒதுக்கும். அந்த நிதியிலிருந்து, அந்தந்த மாவட்டக் கல்வி அலுவ லர்கள், மாவட்ட தொடக் கக்கல்வி அலுவலர்களின் கணக்குக்கு, பணம் பிரித்து அனுப்பப்படும்.

ஆனால், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் நிதி, இதுவரை ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

பள்ளிகளின் ஊதிய பட் டியல், ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட நிலுவை பணப் பலன்களுக்கான பட்டியல் தயாரித்து, 15ம் தேதிக்குள் கருவூலத்துக்கு அனுப்பி னால்தான், மாத இறுதி வேலைநாளில் ஊதியம் வழங்க முடியும்.

ஆனால், தற்போது வரை நிதி ஒதுக்கப்படா ததால், எந்தவித பணப் பலன்களுக்கான பட்டிய லும் கருவூலத்துக்கு அனுப் பப்படவில்லை.

இதனால், ஆசிரியர்கள் மற்றும் ஊழி யர்கள், மே மாதம் ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது. அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல்



பட்ஜெட் நிதி ஒதுக்காததால் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல் *சிவகங்கை

பட்ஜெட் நிதி ஒதுக்காததால் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம், இதர பணப் பலன்களை பெறுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதிக்குள் அந்தந்த நிதியாண்டுக்குரிய பட்ஜெட் நிதியை பள்ளி கல்வித் துறை ஒதுக்கும்.

அந்த நிதி அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் கணக் குக்கு பிரித்து அனுப்பப்படும்.

ஆனால், இந்த நிதியாண்டுக்குரிய பட்ஜெட் நிதியை இதுவரை சிவகங்கை உட்பட பெரும்பாலான மாவட்டங்களுக்கு அனுப்பவில்லை. மேலும், பள்ளிகளிலிருந்து ஊதியப் பட்டியல், ஈட்டிய விடுப்பு தொகை, நிலுவைத் தொகை போன்ற பணப்பலனுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு மாவட்டக் கல்வி அலுவலகம் மூலம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் கருவூலத்துக்கு அனுப்பி னால் தான் மாத இறுதி வேலை நாளில் ஊதியம் பெற முடியும்.

பட்ஜெட் நிதி ஒதுக்காததால் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர் களுக்கான ஊதியப் பட்டியல் இதுவரை கருவூலத்துக்கு அனுப்பவில்லை. இதனால் இம்மாத ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'மாநிலம் முழுவதும் பல ஆயிரம் ஆசிரியர்கள், ஊழியர்கள் உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிகின்றனர். பட்ஜெட் நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டதால் இம்மாத ஊதியம் குறித்த காலத்தில் பெற முடியாத நிலை உள்ளது. விரைந்து நிதியை ஒதுக்கி ஊதியம், பணப்பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog