தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 | துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு விபரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 15, 2025

Comments:0

தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 | துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு விபரம்



தமிழ்நாடு பட்ஜெட் 2025-26; நிதி விபரங்கள். Tamil Nadu Budget 2025-26; Financial Details

வருவாய்: மொத்த வருவாய் ரூ.3.31 லட்சம் கோடியாக இருக்கும். இதில், சொந்த வரி வருவாய் ரூ.2.20 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பீடு.

வரியில்லாத வருவாயாக ₹28,818 கோடி கிடைக்கும் என மதிப்பீடு. மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதிப் பங்கீடு ரூ.58.021 கோடியாக மதிப்பீடு.

மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் மானியங்கள் வரும் நிதியாண்டில் ரூ.23,834 கோடியாக மதிப்பீடு. செலவினம்: மொத்த செலவினம் ரூ.373 லட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுக்கடன் வட்டி செலவீனம் ரூ.70,753 கோடியாக இருக்கும். மானியங்கள் உள்ளிட்ட செலவினங்கள் ரூ.1.53 லட்சம் கோடியாகவும், ஓய்வுதியம் வகை செலவினமாக ரூ41,290 கோடி இருக்கும் என மதிப்பீடு.

மூலதனக் கணக்கு: 2024-25 நிதியாண்டில் மூலதனச் செலவுகளுக்காக ரூ.46,766 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வரும் நிதியாண்டில் இது ரூ.57,230 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

வருவாய் பற்றாக்குறை: வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.41,634 கோடியாக மதிப்பீடு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews