கவனம் பெறும் கலைக் கல்லூரிகள்: தமிழ் இலக்கியத்தில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 09, 2022

Comments:0

கவனம் பெறும் கலைக் கல்லூரிகள்: தமிழ் இலக்கியத்தில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்

தமிழகத்தில் பொறியியல் போன்ற தொழில் படிப்புகளை விட கலை - அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு கல்லூரியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.

சமீப ஆண்டுகளாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் விண்ணப்பங்கள் வருகின்றன. குறைந்த கட்டணம் என்பதால் அரசு, அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில் (காலை சுழற்சி வகுப்புகள்) சேர மாணவர்கள் விரும்புகின்றனர். கலைப் பிரிவுவில் தலா ஒரு வகுப்பிற்கு 60 பேரும், அறிவியல் பாடப்பிரிவுகளில் தலா 40 மாணவ, மாணவர்களும் சேர்க்கப்படுகின்றனர். ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக 3 அல்லது 4 மடங்கு விண்ணப்பங்கள் வருவதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். மதுரை, திண்டுக்கல் , தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை அடங்கிய மதுரை மண்டலத்திலுள்ள 29 அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் 2022 - 23-ம் கல்வியாண்டிற்கு பல இளநிலை பாடப்பிரிவுகளுக்கு 73,260 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்கள் 14, 430 மட்டுமே. 5 மடங்கு அதிகமானோர் விண்ணப்பித்து இருப்பதாக கல்லூரி கல்வி இணை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு கல்லூரியிலும் தமிழ் இலக்கியம், ஆங்கிலம், வரலாறு, வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி ஐடி பாடங்களில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அரசு கல்லூரி, மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, திருமங்கலம் அரசு கல்லூரிகளில் தமிழ் இலக்கிய பாடத்தில் சேர போட்டி அதிகரித்துள்ளது. திருமங்கலம் அரசு கல்லூரியில் ஏ மற்றும் பி தமிழ் பாட பிரிவுகளுக்கு தலா 60 பேர் மட்டுமே சேர்க்க முடியும் என்றாலும், 1,200 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். பிற அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் 3 மடங்கு அதிகமானோர் தமிழ் பாடப்பிரிவில் சேர விரும்பியுள்ளனர். அரசு போட்டித் தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம், எளிதில் தேர்ச்சி பெற முடியும் என்ற நம்பிக்கையில் இப்பாடப்பிரிவை தேர்ந்தெடுகின்றனர் என, தமிழ்துறை பேராசிரியர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

தமிழ் பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, போலீஸ் எழுத்துத் தேர்வுகளில் தமிழ் இலக்கியங்களில் இருந்து கூடுதல் வினாக்கள் இடம் பெறுகின்றன. அரசு வேலை வாய்ப்பிலும் தமிழுக்கான முக்கியம் கருதியே அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லுாரிகளில் பி.ஏ., தமிழ் இலக்கியம், மொழியியல் பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்’’என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews