நாளை (22.01.2023) மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 21, 2023

Comments:0

நாளை (22.01.2023) மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கரூரில் நாளை மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் Tomorrow (22.01.2023) huge private placement camp

கரூரில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை (22.01.2023) நடைபெற உள்ளது. வேலை நாடுநர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அமைச்சர்  செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

January 21, 2023 by பிரபாகரன் வீரமலை

கரூரில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை (22.01.2023) நடைபெற உள்ளது. வேலை நாடுநர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என  அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை இன்று மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்ததாவது:

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொழிலாளர் நலத்துறையின் சார்பாகவும், கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் கரூர் மாவட்ட மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (22.01.2023 ) நடைபெற உள்ளது.

இந்த சிறப்புமிக்க வேலை வாய்ப்பு முகாமில் மாண்புமிகு தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் கலந்து கொண்டு தொழில் திறன் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பயிற்சிக்கான சேர்க்கை சான்றிதழ்களை வழங்க உள்ளார்கள். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 220 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 26 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.  மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி 2 கோடி 67 லட்சம் இணைப்பு இணைத்து கொண்டிருக்கிறார்கள். இதில் 2 கோடிக்கு மேற்பட்ட மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்து உள்ளார்கள். இந்த முகாம் இந்த மாதம் கடைசி வரை நடைபெறுகிறது. மின் இணைப்புடன் ஆதார்  என்னை இணைப்பதால் இலவச மின் திட்டங்கள் இரத்து ஆகும் என்ற பயம் தேவையில்லை. விவசாயிகளுக்கு விசைத்தறி கைத்தறி நெசவாளர்களுக்கு குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம்  மின்சாரத் துறையை மேம்படுத்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு 9048 கோடி மானியத்தை வழங்கினார்கள். இந்த ஆண்டு கூடுதலாக 4000 கோடி மானியத்தை வழங்கி உள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாசியோடு இந்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ‌.சுந்தரவதனம்,இ.கா‌.ப., மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) திரு.ஞானசேகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி ஷீலா, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் திரு சீனிவாசன், கரூர் மாநகராட்சி துணை மேயர் திரு.ப. சரவணன், கல்லூரி முதல்வர் திருமதி கௌசல்யா தேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி வாணிஸ்வரி, மண்டல தலைவர் திரு எஸ். பி.கனகராஜ் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews