Breaking

Wednesday, July 22, 2026

8,193 கோவில்களில் அறங்காவலர் பதவி: விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 20ம் தேதி



8,193 கோவில்களில் அறங்காவலர் பதவி: விண்ணப்பம் வரவேற்பு

ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 8,193 கோவில்களுக்கு, அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு உள்ளன. அறநிலையத் துறை அறிக்கை:

அறங்காவலர் நியமனம் தொடர்பான அறிவிப்பு,

கோவில்களின் விபரங்கள், தகுதிகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் ஆகியவற்றை, www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தகுதியுடைய நபர்கள், விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ, சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி கமிஷனர் அலுவலகங்களுக்கு, ஆகஸ்ட் 20ம் தேதி, மாலை 5:45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் உள்ள 8,193 கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் (Non-Hereditary Trustees) பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சட்டம் 49(1)-ன் கீழ், பட்டியலைச் சேராத இந்த திருக்கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்த அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

முக்கியத் தகவல்கள்

கடைசி நாள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 20, 2026 மாலை 5:45 மணிக்குள் சென்றடைய வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை இணையவழியில் பூர்த்தி செய்யலாம் அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சமர்ப்பிக்கும் இடம்: பூர்த்தி செய்த படிவங்களை உரிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது விரைவுத் தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

கூடுதல் ஆவணங்களாக விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை, முகவரி சான்றுடன், சம்பந்தப்பட்ட கோயிலின் ஆட்சேபனையின்மை சான்றிதழ் மற்றும் காவல் துறை சரிபார்ப்பு சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog