Breaking

Wednesday, June 24, 2026

ஆசிரியர் காலியிடங்களை தெரிவிக்க உத்தரவு



ஆசிரியர் காலியிடங்களை தெரிவிக்க உத்தரவு Order issued to report teacher vacancies.

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, ஆசிரியர் பணியிட விபரங்களை, வரும் 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை நடத்த, மாவட்ட வாரியாக காலியாக உள்ள தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட, அனைத்து வகை ஆசிரியர் காலியிடங்களை, வரும் 23ம் தேதிக்குள், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

முன்னறிவிப்பின்றி ஒரு மாதத்துக்கு மேல் பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் பணியிடங்களையும், காலிப்பணியிடமாகக் கருத வேண்டும்.

தற்காலிக பணிநீக்கம், மகப்பேறு விடுப்பு, வேறு பள்ளி அல்லது அலுவலகத்தில் மாற்றுப்பணிக்கு சென்றவர்கள், மருத்துவ விடுப்பில் உள்ளவர்களின் பணியிடங்களை, காலியிடமாக கருதக்கூடாது.

பட்டியலை பதிவேற்றிய பின், திருத்த இயலாது. பட்டியலில் ஏற்படும் தவறுகளுக்கு, முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog