TNPSC - குரூப் -2 தேர்வு முடிவு எப்போது? - ஆணையம் விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 17, 2022

Comments:0

TNPSC - குரூப் -2 தேர்வு முடிவு எப்போது? - ஆணையம் விளக்கம்

TNPSC - குரூப் -2 தேர்வு முடிவு

குரூப் 2 தேர்வுக்கான முடிவுகளை ஜூன் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மே 21-ம் தேதி குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். தமிழகத்தில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெறவுள்ளதாகவும், அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களிலும் குறைந்தபட்சமாக நீலகிரியில் 3 மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது.
tnpsc-group-2-exam-result
ஆணையம் விளக்கம்

நடப்பாண்டில் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். இதன்படி 8.30 மணிக்கே தேர்வர்கள் அறைக்குள் வர வேண்டும். 8.59 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் அறையினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குரூப் -2 தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84602027