சாலை விபத்தில் மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு - முதலமைச்சர் இரங்கல்& ₹2 லட்சம் நிவாரணம்
மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு - இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவு
செய்தி வெளியீடு எண்: 540
12.03.2024
செய்தி வெளியீடு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.
செங்கல்பட்டு மாவட்டம். மதுராந்தகம் வட்டம். சிறுநாகலூர் கிராமம். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று 12.3.2024 காலை தொழுப்பேடுவிலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மதுராந்தகம் தனியார் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்கள் திரு.தனுஷ் (வயது 21) த/பெ.முனியப்பன். திரு.கமலேஷ் (வயது 19) த/பெ.முருகேசன் மற்றும் திரு.மோனிஷ் (வயது 19) த/பெ.சிவகுமார் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிழிந்தனர் மேலும், இவ்விபத்தில் திரு.ரவிச்சந்திரன் (வயது 20) த/பெ.குணசேகரன் என்பவர் மதுராந்தகம் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும். வேதனையுமடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறன். ஈடுசெய்ய முடியாத இந்தப் பேரிழப்பு நம் அனைவருக்கும் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
Search This Blog
Tuesday, March 12, 2024
Comments:0
Home
accident on a bus
Chief Minister M. K. Stalin
Press Release
சாலை விபத்தில் மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு - முதலமைச்சர் இரங்கல்& ₹2 லட்சம் நிவாரணம்
சாலை விபத்தில் மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு - முதலமைச்சர் இரங்கல்& ₹2 லட்சம் நிவாரணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.