அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை திடீரென குறைக்கப்பட்டு, வரும், 6ம் தேதி முதல் பயிற்சிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள், மே 13ல் முடிந்தன. மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜூன் 12 வரை கோடை விடுமுறை.
இந்நிலையில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு, கோடை விடுமுறை 5ம் தேதியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும், 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை, பள்ளிக்கல்வி துறை நடத்தும் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும்படி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுதன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்புக்கு, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளி திறந்த பின் பயிற்சி வகுப்பை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நல்ல முடிவு.
ReplyDelete