அரசுப் பள்ளி மாணவியை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் Chief Minister and Udhayanidhi Stalin personally called and congratulated the government school girl
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த மே 6-ம் தேதி வெளியானது. இந்த ஆண்டு தேர்வு முடிவில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 மாணவர்கள் (94.56%) தேர்ச்சி பெற்றனர். இதில் பொதுத் தேர்வெழுதிய 125 சிறைவாசிகளில் 115 பேர் (92%) தேர்ச்சி பெற்றனர். இந்த சூழலில் தேர்வெழுதிய ஒரே ஒரு திருநங்கை மாணவியும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். சென்னை லேடி வில்லிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நிவேதா என்ற திருநங்கை மாணவி அறிவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார். பல்வேறு தடைகளையும், கேலி கிண்டல்களுக்கு மத்தியிலும் தனது முயற்சியால் 283 மதிப்பெண் பெற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
திருநங்கை மாணவியின் இந்த சாதனையை பலரும் பாராட்டினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேரில் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தார். அதேபோல் நேற்றைய தினம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுகழக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, திருநங்கை மாணவி நிவேதாவை சென்னை சி.ஐ.டி காலனி இல்லத்திற்கு அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருநங்கை மாணவி நிவேதாவை தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து, தனது பாராட்டை தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “பிளஸ் டூ பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள திருநங்கை சகோதரி நிவேதாவை இன்று நேரில் வாழ்த்தினோம்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.