பதவி உயர்வு பெறுவது தொடர்பாக மட்டும் TET தேவை என்ற வழக்கு ஏற்கனவே ஜூன் 15 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கவும் அவகாசம் வழங்கி, ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. எனவே அதற்குள் இந்த தீர்ப்பை வைத்து இறுதி முடிவுக்கு வர இயலாது.
மேலும் இதில் பதவி உயர்வுக்காக TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை எதிர் Party ஆக சேர்க்காமல் வழக்கு நடைபெற்றுள்ளது.
பதவி உயர்வுக்கு TET அவசியம் எனில் ஏற்கனவே அரசு அறிவித்திருக்க வேண்டும்.
உரிய கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும்.
இதுவரை 20 TET தேர்வுகளை நடத்தியிருக்க வேண்டும். எனவே எல்லா விபரங்களும் ஜூன் 15க்கு மேல் அல்லது ஜூன் இறுதியில்தான் தெரியவரும்.
அதுவரை இந்த விசயத்தில் TET தேர்ச்சி பெற்றவர்கள் ஆனந்தப்படவோ, TET தேர்ச்சி பெறாதவர்கள் ஆத்திரப்படவோ தேவையில்லை.
மிக விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.
மிக விரைவில் கல்வி அமைச்சர், இயக்குநர்கள், கல்வித்துறை செயலர் கூட்டம் நடைபெற உள்ளது.
நல்ல முடிவு நீதிமன்றத்தில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.