கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் சென்னை பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு - செய்தி வெளியீடு எண்:1054 நாள்:07.11.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 07, 2021

Comments:0

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் சென்னை பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு - செய்தி வெளியீடு எண்:1054 நாள்:07.11.2021

செய்தி வெளியீடு எண்:1054

நாள்:07.11.2021

செய்தி வெளியீடு

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் சென்னை பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (7.11.2021) வடகிழக்கு பருவமழையையொட்டி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் சென்னை பகுதிகளான சைதாப்பேட்டை. வேளச்சேரி, பள்ளிக்கரணை, தியாகராய நகர் ஆகிய பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு, அவற்றை உடனடியாக களைய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிக வழங்கினார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை எதிர்கொள்ளவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள வடசென்னையில் புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி, வில்லிவாக்கம், கொளத்தூர் ஆகிய பகுதிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று காலையில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, மாலையில் சைதாப்பேட்டை, ஆட்டுத்தொட்டி பாலப் பகுதியில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், ஆட்டுத்தொட்டி, செங்கேணியம்மன் கோயில் தெரு மற்றும் வண்டிக்காரன் தெரு ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். எடுக்க வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மேலும், கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார். அத்துடன் மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம்கள் நடத்திடவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தின் முடிவில், ஆவின், பொது போக்குவரத்து. மின்சாரம், உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர்த்து சென்னை மாவட்டத்திலுள்ள இதர அரசு அலுவலகங்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுப்பு அளித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும், தனியார் நிறுவனங்களும், தற்போதைய மழை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு. தங்கள் பணியாளர்களுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை அளித்தோ அல்லது வீட்டிலிருந்து பணிபுரியும் வகையிலோ ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இக்கூட்டத்தில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே. என். நேரு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன். மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர் பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews