நான் முதல்வன் திட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்புகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 31, 2025

Comments:0

நான் முதல்வன் திட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்புகள்

நான் முதல்வன் திட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்புகள் - Online Certificate Courses in the Naan Multhulvan Project

நான் முதல்வன் திட்டத்தில் கற்றுத்தரப்பட உள்ள இணையவழி சான்றிதழ் படிப்புகளை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதலுக்காக பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்தொடர்ச்சியாக மாணவர்கள் தங்கள் உயர்கல்வி சார்ந்த திறன்களை வளர்த்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக இணையவழியில் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட உள்ளன.
1349008


அதன்படி பள்ளி நேரம் முடிந்த பின் ஆசிரியர்கள், மாணவர்கள் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களை பயன்படுத்தி இந்த சான்றிதழ் படிப்புகளை கற்றுக் கொள்ளலாம். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி செயல்படுதல் வேண்டும். மேலும், இந்த சான்றிதழ் படிப்புகளை மாணவர்கள் முறையாக பயன்படுத்தி கொள்வதற்கான பணிகளை அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews