அரசு போட்டித் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு கைபேசி செயலி - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறுவதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், அனைத்து விதமான அரசுப் பணியிட போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போருக்காக ஒருங்கிணைந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்த செயலி மூலம், தேர்வுகளுக்கான அறிவிக்கைகள், தேர்வின் முடிவுகள் ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.
சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் ரயில்களில் குளிர்பதன ரயில்பெட்டிகளை அறிமுகம் செய்ய, தெற்கு ரயில்வேயுடன் இணைந்து சாத்தியக் கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.