'தமிழகத்திலேயே பாட நூல்களை அச்சடிக்க ஏற்பாடு’ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 17, 2022

Comments:0

'தமிழகத்திலேயே பாட நூல்களை அச்சடிக்க ஏற்பாடு’

'தமிழகத்திலேயே பாட நூல்களை அச்சடிக்க ஏற்பாடு’

பாட நூல்கள் அனைத்தும் தமிழகத்திலேயே அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு பாட நூல் கழகத் தலைவா் ஐ. லியோனி தெரிவித்தாா்.

சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பாட நூல்கள் அச்சிடுவோா் நலச் சங்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் உதயக்குமாா் தலைமை வகித்தாா். இதில் தமிழ்நாடு பாட நூல் கழகத் தலைவா் ஐ. லியோனி பேசியதாவது:

தற்போது பாட நூல்கள் தமிழகத்தில் உள்ள அச்சகங்களில் 92 சதவீமும், வெளிமாநில அச்சகங்களில் 8 சதவீமும் அச்சிடப்பட்டு வருகின்றன. 100 சதவீதம் தமிழகத்திலேயே அச்சிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஒப்பந்தப்புள்ளி பெற வேண்டுமென்றால், அது சா்வதேச ஒப்பந்தப்புள்ளியாக பெற வேண்டும் என விதிமுறை உள்ளது. தற்போது அதிகாரிகளிடம் வெளிமாநிலத்தினா் புத்தகம் அச்சிட ஒப்பந்தப்புள்ளி பெற்றாலும், அவா்களது அச்சகம் தமிழகத்தில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளேன். அதிகாரிகளும் இதற்கு ஒப்புதல் வழங்க உள்ளனா்.

எனவே, வரும் காலங்களில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புத்தகங்கள் அனைத்தும் நமது மாநிலத்திலேயே அச்சிடப்படும். இதனிடையே, அச்சு மை உள்ளிட்டவை விலை உயா்ந்துள்ளது.

2023-ஆம் ஆண்டில் மூன்றாண்டுகளுக்கு ஒப்பந்தப்புள்ளி பெறும் போது, தற்போதய அச்சடிப்புக் கட்டணத்தைவிட 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, புத்தகங்கள் விநியோகம் செய்யும் மையங்கள் அதிகரித்துவிட்டன. இதனால், போக்குவரத்துச் செலவு அதிகமாகிறது என சங்கம் கூறியுள்ளது.

அதிகப்படியான செலவுக்கு ரசீது கொடுத்தால் பாட நூல் கழகம் அந்தத் தொகையை வழங்கத் தயாராக உள்ளது. மேலும், புத்தகங்கள் அச்சிட காகிதம் காலதாமதமின்றி வழங்க நடவடிகை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பாட நூல் அச்சிடுவோா் சங்கச் செயலா் குமரேசன் நன்றி கூறினாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews