Breaking

Thursday, June 04, 2026

புதிய பாடபுத்தகங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

புதிய பாடபுத்தகங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

a training program conducted for primary school teachers regarding newly developed textbooks.

Here is a comprehensive summary of the core news published in the article:

Core Event & Location

Event: A training session for teachers handling classes 1 to 3 regarding new textbooks.

Location: Killiyoor Block Resource Centre, Nagercoil, Tamil Nadu.

Date: June 4.

Curriculum DetailsPolicy Alignment: The textbooks have been developed based on the Tamil Nadu State Education Policy for the 2026–27 academic year.

Target Classes: First phase covers classes 1, 2, and 3.

Pedagogical Approach: Books focus on child-centric, skill-based learning, utilizing activity-based, play-way, and experiential methodologies. Expert committees designed the curriculum.

Training Structure

Duration: Three-day training program.Core Focus: Training covers the implementation of new textbooks, teacher handbooks, classroom activities, and student evaluation methods.

Schedule Breakdown:Day 1: Tamil and English subjects.Day 2: Mathematics.Day 3: Science and Social Science subjects.

Participation: 84 teachers from government and government-aided schools across the Killiyoor block attended.

Official Oversight

Inauguration: Block Resource Supervisor Geetha inaugurated the training.

Inspection: Block Education Officer Mangai inspected the program and offered guidance.

Resource Persons: Teacher educators John Bennet Raj, Franklin, and Murugesan served as key resource persons alongside intermediate-level mentor teachers. நாகர்கோவில், ஜூன் 4-

கிள்ளியூர் வட்டார வளமையத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு புதிய பாடபுத்தகங்கள் குறித்த பயிற்சி நடந்தது.

தமிழ்நாடு புதிய கல்வி கொள்கை 2025ன் படி முதற்கட்டமாக 2026-27ம் கல்வியாண்டில் 1 முதல் 3ம் வகுப்பு வரை புதிய பாடப்புத்தகங்கள் உரு வாக்கப்பட்டு உள்ளன. தொடக்க நிலையில் குழந் தைகள் திறன் அடிப்படை யிலான கற்றலை உறுதி செய்யும் வகையில் செயல் வழி, விளையாட்டுமுறை, அனுபவ வழியிலான கல்வியை உள்ளடக்கி வல்லுநர் குழுக்கள் மூலம் பாட புத்தகங்கள் உரு வாக்கப்பட்டுள்ளன.

இந்த புத்தங்களை பயன்படுத்தி வகுப்பில் ஆசிரியர்கள் திறம்பட பாடம் நடத்தும் வகையில் ஆசிரியர்கையேடும் தயார் செய்யப்பட்டு உள்ளது. தமிழ், ஆங்கிலம், கணி தம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு தனித்தனியே ஆசிரியர் கையேடுகள் வழங்கப் பட்டுள்ளன.

புதிய பாடப்புத்தகம், ஆசிரியர் கையேடு, வகுப் பறை செயல்பாடுகள், புதி தாக வழங்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான மதிப் பீட்டு முறைகள், இதர கற்றல் வளங்கள் ஆகிய வற்றை திறம்பட கையா ளும் வகையில் ஆசிரியர் களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்படு கிறது.


முதல் நாள் தமிழ் பாடம், 2ம் நாள் ஆங்கி லம், கணிதம் பாடம், 3ம் நாள் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு என தனித்தனியே பயிற்சி வழங்கப்படுகிறது. கிள்ளி யூர் வட்டார வள மையத் தில் அனைத்து அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்புகளை கையாளும் 84 ஆசிரியர்கள் பயிற்சி யில் கலந்து கொண்டனர்.

பயிற்சியை வட்டார வள மேற்பார்வையாளர் கீதா துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் மஞ்சு பயிற்சியை பார் வையிட்டு ஆசிரியருக்கு கருத்துக்களை வழங்கி னார். ஆசிரியர் பயிற்றுநர் கள் ஜான் பெனட் ராஜ், பிராங்கிளின், முருகேசன் மற்றும் பயிற்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல் பட்டனர். பயிற்சி ஏற்பாடு களை தேரூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரை யாளர் வல்ஸா ஜூடிற் ஆன்றோ செய்திருந்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog