6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள சீட்டு விளையாட்டை நீக்க கோரிக்கை!
6-ம் வகுப்பு பாடப் புத்தக்கத் தில் இடம்பெற்றுள்ள சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தை பள்ளிக்கல்வித் துறை நீக்க வேண்டும் என மனிதநேய மக்கள்கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹி ருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 6-ம் வகுப்பு கணக்குப் பாடத்தில் 3-ம் பருவத்தின் தொகுதி 2-வது பாடப்புத்தகத்தில் ‘இயல் இரண்டில் முழுக்கள்’ எனும் தலைப்பில் பாடம் இடம்பெற்றுள்ளது. கணிதத்தில் முழுக்கள் குறித்து உவமையுடன் நடத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன.
ஆனால் இதில், சீட்டுக்கட்டு முறையை மாணவர்களிடையே அறிமுகப்படுத்தியிருப்பது ஏற்புடையது அல்ல. ஆன்லைன் ரம்மி மற்றும் இதர சூதாட்டங்களில் சீட்டு கட்டு முறையே முதலிடம் வகிக்கிறது. இத்தகைய சூழலில் மாணவர் பருவத்திலேயே சீட்டுகட்டு விளையாட்டு குறித்தும் அதன் விளையாட்டு உத்தி குறித்தும் விரிவாகப் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்திருப்பது சரியல்ல.
கொள்கைக்கு முரணானது: இப்பாடத்திட்டம் அதிமுக அரசு காலத்தில் வடிவமைக்கப்பட்டது என்றாலும்கூட, திமுக ஆட்சியில் இதே பாடம் நீடிப்பது கொள் கைக்கு முரணானது. எனவே மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அந்த பாடத்தை நீக்க பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Search This Blog
Friday, May 03, 2024
Comments:0
6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள சீட்டு விளையாட்டை நீக்க கோரிக்கை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.